search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரேன் விபத்து"

    • மகாராணா பிரதாப் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றபோது விபத்து.
    • பலத்த காயமடைந்த இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை.

    மத்திய பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள மகாராணா பிரதாப் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற கிரேன் சரிந்து 20 அடி உயரத்தில் இருந்து கீயே விழுந்து விபத்துக்குள்ளானது.

    அந்த கிரேனில், போபாலின் வார்டு 66-ன் கவுன்சிலர் ஜிதேந்திர சிங் ராஜ்புத் தனது மாமாவுடன் கிரேனில் இருந்தார். அவர்களில் ஒருவர் கிரேன் ஆபரேட்டரிடம் மேலே செல்லும்படி சைகை செய்வதைக் கண்டார்.

    கிரேன் சிலையை அடைந்ததும், கவுன்சிலர் மாலை அணிவிக்க முன்னோக்கி சாய்ந்தபோது, கிரேனில் இருந்த வெல்டிங் உடைந்ததால், கிரேன் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    பலத்த காயமடைந்த இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்தில் ராஜ்புத்தின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது, அதே நேரத்தில் அவரது மாமாவும் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பாலம் கட்டுமானபணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்,
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமானபணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர்களில் இருவர் கிருஷ்ணகிரி மாவட்டம், போகனப்பள்ளி ஊராட்சி, விஐபி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 36) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கண்ணன் (23) என்றும் கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் பொதுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் மேற்கொண்டார்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    • குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் திரவுபதி அம்மன் மற்றும் மண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பொங்கல் பண்டிகை முடிந்து, கடந்த 22 -ந் தேதி இரவு மயிலேறு திருவிழா நடைபெற்றது.

    இதில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கிரேன் மூலமாக தொங்கியபடி வந்து, அம்மனுக்கு மாலை அணிவிக்க வந்தனர்.

    அப்போது, கிரேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில் பெரப்பேரி காலனியை சேர்ந்த சின்னசாமி (வயது 73), கீழ்வீதி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த முத்துகுமார் (42), கீழ்வீதியைச் சேர்ந்த ஜோதிபாபு (17), கீழ்ஆவாதம் பகுதியைச் சேர்ந்த பூபாலன் (48) ஆகியோர் இறந்தனர்.

    இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் டிரைவர் பனப்பாக்கத்தை சேர்ந்த முருகன் என்பவரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.

    மேலும், இந்த வழக்கில் கிரேன் உரிமையாளர் அருண் (27) மற்றும் விழாக்குழுவினர் சதீஷ் (21), படையப்பா (24), ராமதாஸ் (32), கண்ணன் (28), கலைவாணன் (26) ஆகிய 6 பேர் தேடப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயிலேறு நிகழ்ச்சியின்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • கிரேன் விபத்து தொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரோக்கணம் நெமிலி தாலுகா கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியின்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சுமார் 8-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்களை புன்னை மருத்துவமனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சிலருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் பணப்பாக்கத்தை சேர்ந்த கிரேன் ஓட்டுநர் முருகன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் கட்டுமான கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் 6 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம், கலபுராகி மாவட்டத்தில் புதிதாக சிமெண்ட் தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. இங்கு, கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் திடீர் என விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், தொழிலாளர்கள் 6 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    மேலும், 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புக்குழுவினர் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×